இரண்டாம் உலகப் போரில் உயிர் தப்பிய முதலை உயிரிழப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியின் பேர்லின் நகரில் உள்ள விலங்கியல் பூங்கா மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் உயிர் தப்பிய செட்ர்ன் என்ற முதலை இன்று உயிரிழந்துள்ளது.

இந்த முதலைக்கு தற்போது 84 வயது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உயிரிழந்த இந்த முதலை 1936 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிசிசிப்பியில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனியின் பேர்லின் விலங்கியல் பூங்காவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இந்த முதலை பின்னர் 1946 ஆம் ஆண்டு மொஸ்கோ விலங்கியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது பேர்லின் நகர் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் காணாமல் போயிருந்த பிரித்தானிய படையினர் இந்த முதலையை மீட்டதுடன் அதனை மொஸ்கோ விலங்கியல் பூங்காவிடம் ஒப்படைத்தனர்.

உயிரிழந்த இந்த முதலை ஜேர்மனிய சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் செல்லப் பிராணி என சில சர்வதேச ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்தன.