நோயாளி - வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு கட்டமாக நோயாளி- வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த கணணி மென்பொருளை இன்று அறிமுகப்படுத்தினார்.

ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கணணி பீடம் இதனை வடிவமைத்துள்ளது.

cuRec என்ற இந்த மென்பொருளை பல்கலைக்கழகத்தின் கணணிவிஞ்ஞான திணைக்களத்தின் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி பிரதீப் கலன்சூரிய தலைமையிலான வைத்திய குழுவினர் மற்றும் மருத்துவப்பீட மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தக்குழுவில் லேடி ரிட்ஜ்வே வைத்திசாலையின் வைத்திய கலாநிதி வாசன் ரட்ணசிங்கமும் உள்ளடங்கியுள்ளார்.