வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 83 பேருக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 83 பேர் கொரோனா வைரஸ் நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த வாரம் இலங்கை திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 25 பேர் கொரோனா நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட 83 பேரில் இந்தோனேசியா, துபாய், மலேசியா, குவைத், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், தென் கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் அடங்குகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர், வெளிநாடுகளில் இருந்து இதுவரை 4 ஆயிரத்து 731 பேர் நாடு திரும்பியுள்ளனர்.