கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 344 ஆக உயர்வு!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலையில் 12 கடற்படையினர் குணடைந்த நிலையில் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 732.

நடப்பில் 711 பேர் கொரோனாவுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1453 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.