1500 ஐ கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை - இன்றைய தொற்றாளர்களின் விபரங்கள்

Report Print Tamilini in சமூகம்

இலங்கையில் இன்று இதுவரையில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவர்களுள் 17 பேர் டுபாயில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும் , மேலும் 15பேர் குவைத் இல் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய 2 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 745 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 748 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.