வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்த 321 பேருக்கு கொரோனா தொற்று

Report Print Tamilini in சமூகம்

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் இருந்து வந்த இலங்கையர்கள் 466 பேரில் 321 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை வரையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 34 ஆகும். இவர்களில் 17 பேர் டுபாயிலிருந்து வந்தவர்களும், 15 பேர் குவைத்தில் இருந்து வந்தவர்களும் ஏனைய இருவர் கடற்படையினர் ஆவர். அதற்கமைய இதுவரையில் 1503 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதற்கமைய வெளிநாடுகளில் இருந்து வந்த 466 பேரில் 321 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.