பேருந்து போக்குவரத்தில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்!

Report Print Vethu Vethu in சமூகம்

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்வதனை சட்டமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர யோசனை ஒன்று சமர்ப்பித்துள்ளார்.

புதிய சட்டத்தை அமுல்படுத்துவதாயின் பேருந்து கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்லும் சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் பேருந்து துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மாகாண பேருந்து சங்கத்தின் தலைவர் சரத் வீஜிதகுமார தெரிவித்துள்ளார்.

பேருந்திற்காக ஏற்படும் செலவினை ஏற்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த யோசனையை செயற்படுத்துவதற்கு மாற்று கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.