நாட்டு மக்களின் நன்மைக்காக அரசாங்கம் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் இயல்பு வாழ்க்கைகக்கு திருப்பும் நடவடிக்கைக்கமைய மரண வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் சுகாதார பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

மரண வீடுகளில் முடிந்த அளவு குடும்ப உறுப்பினர்களை மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிந்த அளவு குறைந்த நாட்களுக்குள் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்குமாறும், மரண வீடுகளில் இருப்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

அத்துடன் மரண வீடுகளில் நுழையும் இடங்களில் கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் குறைந்தபட்சம் ஒரு மீற்றர் தூர இடைவெளியில் கதிரைகள் வைக்க வேண்டும்.

மரண வீடுகளில் டாம், கரம், சூதாட்ட அட்டை விளையாட்டுகள் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படாது.

மதுபானம் அருந்துவதற்கு, புகைபித்தல், வெற்றிலை உட்கொள்வதற்கும் மரண வீடுகளில் அனுமதி வழங்கப்பட கூடாது.

மரண வீடுகளுக்கு வருபவர்களுக்கு தேனீர் வழங்கினால் மீள் பாவனை செய்யாத கோப்பைகளை பயன்படுத்துவதோடு, சூடான பானங்கள் மாத்திரமே வழங்கப்பட வேண்டும். பயன்படுத்திய கோப்பைகளை குப்பையில் வீசுவதற்கான ஏற்பாடுகளும் செய்திருத்தல் அவசியமாகும்.

அவசியம் இல்லை என்றால் மரண வீடுகளுக்கு செல்லாமல் இணையத்தளம், தொலைபேசி ஊடாக தமது அனுதாபங்களை வெளிப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண வீடுகளுக்க சென்றால் அங்கு செலவிடும் நேரம் குறைவாக இருக்க வேண்டும். செல்லும் இடங்களில் யாரையும் தொட்டு பேசாமல் ஒரு மீற்றர் தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

உள்ளே செல்லும் போதும் வெளியே வரும் போதும் கை கழுவ வேண்டும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.