பிறந்தநாளில் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி!

Report Print Theesan in சமூகம்

மறைந்த முன்னாள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழர் சமூக ஜனநாயக கட்சி மற்றும் சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில், அன்னாரது உருவபடத்திற்கு நினைவு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, இளைஞரணி தலைவர் ப.கார்த்தீபன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இன்று, அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.