நாளை பல பகுதிகளில் நீர்வெட்டு! கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Murali Murali in சமூகம்

நாளைய தினம் கொழும்பில் பல பகுதிகளுக்கு 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 02, 03, 07, 08, 09 மற்றும் 10 பகுதிகளுக்கான நீர் வழங்கல் நாளை காலை 9.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை 3.00 மணி வரை நிறுத்தப்படும்.

இந்த காலகட்டத்தில் கொழும்பு 01இல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாலிகாகந்த வரை பிரதான பரிமாற்றக் குழாயின் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.