அரசாங்கத்தின் முடிவுகளை தாமதமாக்கும் வணிக வங்கிகளால் சர்ச்சை

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கம் அறிவித்த கடன்களை செலுத்தும் கால அவகாச நீடிப்பு உட்பட்ட நிதி நிவாரணங்கள் வங்கிகள் காரணமாக தாமதமாவதாக வர்த்தகத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வர்த்தகத்துறையை மேம்படுத்துவதற்காக கடன்களுக்கான மீள்செலுத்துகை காலத்தை நீடிப்பது மற்றும் 4 வீத வட்டியில் செயற்படு மூலதன கடன் என்பவற்றை வழங்குமாறு மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு பணித்திருந்தது.

எனினும் வங்கிகள் இன்னும் தமது ஆவணப்பணிகளை நிறைவுச்செய்யாமையால் தமக்கான நிதிநிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை என்று வர்த்தகத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் வங்கிகளுக்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அவை தொடர்பில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வணிக வங்கிகள் தெரிவித்துள்ளன.