ஆறுமுகம் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் சட்டம் மீறப்பட்டதாக பொஸிஸார் குற்றச்சாட்டு

Report Print Vethu Vethu in சமூகம்

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நேற்றைய தினம் மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த பெருந்தொகை மக்கள் வீதிக்கு வந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன?

நுவரெலியாவில் குறித்த இடத்திற்கு அனுமதி பத்திரம் பெற்றவர்கள் மாத்திரமே வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை முடிந்த அளவு கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறித்த பிரதேச பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கைகளை ஆராய்வதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் கண்கானிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலத்தில் பயணித்த போது மக்கள் பங்குபற்றுவதனை குறைப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் எதாவது செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக போதுமான அளவு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.