சட்டவிரோதமாக வெட்டப்பட்ட சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாலை மரங்கள்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாலைமரத் தீராந்திகளை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது அதனை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

மாந்தைகிழக்கு, ஒட்டன் குளம் பகுதியில் சட்டவிரோதமாக பாலைமரத்தீராந்திகள் வெட்டப்பட்டு வருகின்றமை தொடர்பில் வனவளத்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று குறித்தபகுதியில் பாலைமரத்தீராந்திகளை கைப்பற்றியுள்ளனர்.