கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வாடகைக்கு குடியிருக்கும் அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் உடனடியாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை மேல் மாகாண சிரேஷட் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோண் விடுத்துள்ளார்.

தொம்பே பிரதேசத்தில் சட்டவிரோதமாக போதைப் பொருள் தயாரிப்பு இடத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய தொம்பே பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் நடத்தி செல்லப்பட்ட சட்ட விரோத மதுபான தயாரிப்பு நடவடிக்கை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வாடகை அடிப்படைக்கமைய பெற்றுக்கொள்ளப்பட்ட வீடு ஒன்றிலேயே இவ்வாறு மதுபான தயாரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பதிவு செய்யாமல் தற்காலிகாக குடியிருக்கும் அனைவரும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு உட்பட இது மிகவும் சிறப்பான நடவடிக்கையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.