காட்டில் வேட்டையாடிய இருவர் துப்பாக்கிகளுடன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

திஸ்ஸமஹாராமை, பொரலிஹெல காட்டுப் பகுதியில் வேட்டைக்கு சென்ற இரண்டு பேர் 22.5 கிலோகிராம் வேட்டை இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இந்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பெரலிஹெல குடா கம்மான 4 பிரதேசத்தில் உள்ள காட்டில் தேடுதல் நடத்தியுள்ளனர்.

அப்போது வேட்டையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர், 20.2 கிலோ கிராம் மான் இறைச்சி, 2.3 கிலோ கிராம் உலர்த்தப்பட்ட மரை இறைச்சி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குடா கம்மான பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 41 வயதான நபர்கள் என அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.