கொழும்பில் தற்காலிகமாக வசித்து வருவோர் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தல்

Report Print Kamel Kamel in சமூகம்

கொழும்பில் தற்காலிகமாக வசித்து வருபவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தங்களுக்கு மிக அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இவ்வாறு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கோரியுள்ளார்.

வாக்காளர் டாப்பில் பதிவு செய்யப்படாத அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களும் இவ்வாறு தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகோகொடை ஆகிய 13 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 60 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த பகுதிகளில் சுமார் 41000 பேர் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவல்கள் விசேட தரவுத் தளம் ஒன்றில் பேணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.