இலங்கையில் கொரோனா தொற்றில் உயிரிழந்த 11 வது நபர் தொடர்பான தகவல்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 11வது நபர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் குவைத்தில் இருந்து இலங்கை வந்த 45 வயதுடைய ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கடந்த 3 நாட்களாக ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிசிக்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி அவர் இலங்கை வந்துள்ளார். 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.

26ஆம் திகதி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

ஹோமாகம வைத்தியசாலையில் இன்னும் 102 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.