இலங்கையில் கொரோனா கால திருமணத்திற்கு விதிக்கப்பட்ட கடும் நிபந்தனைகள்

Report Print Steephen Steephen in சமூகம்

இன்று முதல் பல நடவடிக்கைகள் சுகாதார முறைப் பின்பற்றலோடு நடாத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் திருமண நிகழ்ச்சிகளுக்கான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளனர்.

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மாத்திரமே கலந்துக்கொள்ள முடியும். அதுவும் மண்டபத்தின் அளவுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும்.

சமூக இடைவெளியை பேணுவதற்காக திருமண வைபவங்களில் நடனங்கள் நடத்தப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்ளும் ஜோடி மாத்திரமே நடனமாட வேண்டும். தேவை ஏற்பட்டால்,நான்கு பேர் கொண்ட குழுவிற்கு அனுமதியுண்டு.

இதனை தவிர திருமண வைபவங்களில் எந்த வகையிலும் மதுபானம் பயன்படுத்தக் கூடாது.

திருமண வைபவத்தில் சுகாதார பாதுகாப்புக்கு பொறுப்பாக விசேட அதிகாரியை நிமிக்க வேண்டும் என திருமணம் வைபவங்கள் சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது.