700 இந்தியர்களை அழைத்துச்செல்ல இந்திய கடற்படை கப்பல் வருகை

Report Print Ajith Ajith in சமூகம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் “ஜலஸ்வா” இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொரோன வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் நிர்க்கதியாகியுள்ள 700 இந்திய பொதுமக்களை அழைத்துச்செல்லும் நோக்கிலேயே இந்தக்கப்பல் இலங்கை வந்துள்ளது.

இந்தக் கப்பல் இன்று தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பொதுமக்களை ஏற்றிய நிலையில் புறப்படவுள்ளது.

இந்தக்கப்பலில் சமூக இடைவெளிக்கு அமைய மூன்று வலயங்கள் பிரி;க்கப்பட்டுள்ளன.

இதன்படி பச்சை வலயம் கப்பல் பணியாளர்களுக்கு உரியது. சிவப்பு வலயம் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இளஞ்சிவப்பு வலயம் பயணிகளுக்கான சேவைகளை முன்னெடுக்கும் பணியாளர்களுக்கு உரியதாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்;தநிலையில் கப்பலில் முழுமையான பாதுகாப்பு ஒழுங்குவிதிகள் கடைப்பிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்தப்பயணிகள் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

ஏற்கனவே இந்தக்கப்பல் மூலம் மாலைத்தீவில் கொரோனவினால் நிர்க்கதியாகியிருந்த 1000 இந்திய பொதுமக்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.