இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில பிரதேசங்கள் அனர்த்த வலயமாக பிரகடனம்

Report Print Ajith Ajith in சமூகம்

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயங்கள் உள்ள பிரதேசங்களில் உள்ள அனைத்து கட்டிடத் தொகுதிகளையும் அடையாளப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள “அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது” எனும் “ஒட்டிகள்" அனர்த்தம் ஏற்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பதிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் ஓய்வு பெற்ற தாதியர்கள், மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 218 வைத்தியர்களான வெற்றிடங்களும் மற்றும் 332 தாதியர்களுக்கான வெற்றிடங்களும் உள்ளன.

சப்ரகமுவ மாகாணத்தில் தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஓய்வு பெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

அத்துடன் மருத்துவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற வைத்தியர்கள் மற்றும் உதவி வைத்திய அதிகாரிகளை தற்காலிகமாக சப்ரகமுவ மாகாணத்திற்கு சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

அத்துடன் வைத்தியத்துறையில் ஓய்வு பெற்ற இராணுவ வைத்தியர்கள் மற்றும் ஓய்வு பெற்றஇராணுவ தாதியர்களையும் சப்ரகமுவ மாகாண வைத்தியசாலைகளுக்கு சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.