தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலிருந்து வெளியேற வேண்டும்:வவுனியாவில் போராட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும். உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே,சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கதறி அழுது தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

இளம் சமூதாயத்தினர் தான் தமிழர்களின் பிரச்சினையினை தீர்த்து வைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சமூக இடைவெளியினை பேணி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.