இலங்கையில் இதுவரையில் 65000 பீ.சீ.ஆர் பரிசோதனைகள்

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையில் இதுவரையில் அறுபத்து ஐந்தாயிரம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் மட்டும் ஆயிரத்து நாநூற்று இருபது பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.இதன்படி இலங்கையில் மொத்தமாக இதுவரையில் 65355 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, விமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயும் நோக்கில் சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஒருவர் இன்று கட்டுநாயக்க பண்டார நாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.