சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடாத்த ஆயத்தப்பணிகளுக்கு 60-70 நாட்கள் தேவை

Report Print Kamel Kamel in சமூகம்

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடாத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள 60 முதல் 70 நாட்கள் தேவைப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலை தொடர்ச்சியாக ஒத்தி வைப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எவ்வித நோக்கங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு முடியாது என தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக உச்ச நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடாத்துவதற்கான திகதியை நிர்ணயிப்பதில் சட்ட சிக்கல் இல்லாவிட்டால் வேறும் ஓர் நாளை அறிவிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.