சேறுவில பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் சேருவில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன்,மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

மோட்டார் வாகனமொன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

குறித்த விபத்தில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த டி எல் சதாத் 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவரே பலியானதோடு மற்றொருவர் கந்தளாய் பேராறு பகுதியைச்சேர்ந்த ஏ.எம்.மாஹாத் வயது (40) என்பவர் பலத்த காயங்களுடன் அதி தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாயில் இருந்து வான்எல பகுதிக்கு மது போதையில் வெள்ளை வானொன்றில் பயணித்த இளைஞர்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சென்று மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது மோட்டார் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.