மக்களுக்கு கிடைக்கும் மருந்துக்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து நடவடிக்கை

Report Print Varunan in சமூகம்

மக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

எமது கல்முனைப் பிராந்தியத்தில் பொறுத்தளவில் 68 அரசினால் பதியப்பட்ட தனியார்மருந்தகங்கள் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் பல்வேறு இக்கட்டானசூழ்நிலையில் அவர்கள் எமது மக்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் கொவிட் 19தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக காணப்பட்ட வேளையில் நாங்கள்சுகாதார அமைச்சுக்கு வைத்து கோரிக்கைக்கு அமைய மருந்தகங்கள் வீடு வீடாகசென்று மக்களுக்கு மருந்துகளை வினியோகம் செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார்கள்.

மருந்து என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் பாதுகாப்பாக கிடைக்க வேண்டிய ஒருபொருள் அதன் உறுதிப்பாட்டை தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு சுகாதாரதிணைக்களத்திற்கு உள்ளது. வேறு எந்தவிதமான புறக்காரணிகள இல்லாமல் மருந்தகங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டிய விடயம் தொடர்பாக குறிப்பாக அங்குஅங்கு பணியாற்றும் ஊழியர்கள் அது கல்வித் தகமை, சுகாதாரம் , காலாவதி திகதி,மருந்துகளின் தரம் சேமித்து வைக்கும் இடம், போதை ஏற்படுத்தும் மருந்துகள் ,மருந்து சிட்டைகள் அன்றி மருந்துகளை விநியோகம் செய்கின்றார்களா போன்ற விடயங்களில் சுகாதார திணைக்களம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாகபாதுகாப்பு துறையினருடன் சென்று கடந்த ஒரு மாத காலத்திற்குள் ஐந்திற்குமேற்பட்ட பார்மசிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கும் ஒருசில பார்சிகள் மூடப்பட்டிருக்கின்றன.

மருந்தகங்களை பொறுத்தளவில் அவர்கள்மிகுந்த தார்மீக பொறுப்புடையவர்ளாக அவர்களை பார்த்து இருக்கின்றோம். அந்த தார்மீக பொறுப்புகளில் இருந்து அவர்கள் விலகக்கூடாது.

எங்களுக்கு தேவை எமதுபிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த மருந்து வகைகள் கிடைக்கப்பெற வேண்டும்என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

தேர்தல் நடைபெறும் தினம் நிச்சயிக்கப்படாத நிலையில் அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.