ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டு! தேரர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

Report Print Murali Murali in சமூகம்

மாளிகாவத்தை - போதிராஜாராம விகாரையின் தலைமை பிக்கு ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டில் விகாரைக்குள் ஆயுதம் மற்றும் குண்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காகவே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த நாளில் மாளிகாவத்த ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, துப்பாக்கி உட்பட வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

ஊவதென்ன சுமன தேரருடன் குறித்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த அவரது சீடரான மாவெலதென்னே சுமேத தேரரை, அவருக்கு எதிராக அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்தும் நிரபராதியாக கருதி விடுதலை செய்ய நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த தினமொன்றில் மாளிவத்தை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் ரீ-56 ரக துப்பாக்கிகள் 2, கைக்குண்டுகள் 50 மற்றும் 210 ரவைகளை வைத்திருந்ததாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவ்வழக்கு விசாரணைகளின்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தனது தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.