கோழி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

நாட்டின் பல இடங்களில் மேல் தோல் நீக்கிய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 630 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சில இடங்களில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 650 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு வாரம் என்ற குறுகிய காலத்தில் 150 ரூபாயால் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்ளுக்கு முன்னர் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 480 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையானது ஒரு வாரத்தில் 550 ரூபாவாக அதிகரித்தது. இதனையடுத்து அடுத்த சில தினங்களில் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளதுடன் நேற்றைய தினம் 630 ரூபாய் வரை கோழி இறைச்சியின் விலை அதிகரித்திருந்தது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கோழி உற்பத்தி வீழ்ச்சியடைந்து காணப்பட்டதுடன் தட்டுப்பாடும் நிலவியது.

அத்துடன் இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டமை கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே ஒரு கோழி முட்டையின் விலை 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு முட்டை 13 முதல் 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றின் விலைகள் அடுத்த சில தினங்களில் மேலும் அதிகரிக்கலாம் என சந்தை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.