இராணுவ தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன பொறுப்பேற்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இராணுவ தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன இன்று தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகேயின் இடத்துக்கே ஜெகத் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக 1991இல் ஆனையிறவை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட 'ஒப்பரேசன் பலவேகய' நடவடிக்கையின் போது காயமடைந்தார். பின்னர் பருத்தித்துறையின் 524ஆவது படையணியின் தளபதியாக இவர் பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது.