இலங்கையில் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் மற்றும் ஒரு சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளது.

காலி - நெலுவையில் உள்ள ஒரு தனியார் காணியில் இந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வலை ஒன்றில் சிக்கிய நிலையிலேயே இந்த சிறுத்தை உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து குறித்த காணி உரிமையாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வனவிலங்கு திணைக்களப் பணிப்பாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த வாரத்தில் மஸ்கெலிய - வாழைமலை தோட்டத்தில் பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வலையில் சிக்கி அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்று காயமடைந்து பின்னர் உயிரிழந்தது.

இந்த கருஞ்சிறுத்தை இனம் 1956ம் ஆண்டு தெரனியகல பகுதியில் வைத்து கண்டறிப்பட்டதாக தகவல்கள் உள்ளதாக சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யட்டியாந்தோட்டையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

எனினும் அது மீட்ப்பட்டபோது காயங்கள் எவையும் ஏற்படாமைக் காரணமாக அது உடனடியாக விடுவிக்கப்பட்டதாக சூரியபண்டார தெரிவித்துள்ளார்.