இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 1649 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாத்திரம் இதுவரை 6 தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 815 பேர் கொரோனாவுக்காக வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதன்போது 823 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், இதுவரை 11 பேர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டுள்ளனர்.