கனகராயன்குளத்தில் 14 மோட்டார் குண்டுகள் மீட்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் 14 மோட்டார் குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கனகராயன்குளம் பகுதியில் உள்ள குறிசுட்ட குளத்தை புனரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டுகள் காணப்படுவதை அவதானித்த திருத்த பணியாளர்கள் கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசேட அதிரடிப் படையினரை வரவழைத்து சோதனை செய்த போது புதையுண்டு இருந்த 14 மோட்டார் குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றை மீட்ட அதிரடிப் படையினர் அவ்விடத்தில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நீதிமன்ற அனுமதி பெற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.