முகமாலையில் இன்றும் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், எச்சங்கள் மீட்பு!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றது

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 22ம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றும்போது விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக பளை பொலிஸாருக்கு தகவழ் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 26ம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு விடுதலைபனபுலிகளின் சீருடையுடனான மனித எச்சங்கள் மற்றும் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டன.

இந்நிலையில் இன்றையதினம் இரண்டாம் கட்ட அகழ்வு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் இடம் பெற்றிருந்தது.

இன்றைய தினமும் மகசின் 02, தோட்டாக்கல் 34, வெடித்த கப் 6, சைநட் 1, தகடு1, பச்சை இராணுவ சீருடையுடனான மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த அகழ்வு தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு எதிர்வரும் 9ம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.