ஜனநாயகத்துக்கான தங்கள் போராட்டம் தொடரும்! நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் சுமந்திரன் கருத்து

Report Print Murali Murali in சமூகம்

ஜனநாயகத்துக்கான தங்கள் போராட்டம் தொடரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி, பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படாது தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், நிலையில் அந்த மனுக்கள் தொடர்பில் பிரதான வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி என்ற ரீதியில், தீர்ப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “மனுக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபங்களை நிராகரிக்கவும், மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்யவும் உயர் நீதிமன்ரம் தீர்மானித்துள்ளது.

தள்ளுபடி செய்யப்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்டவை தெரியவில்லை. விபரமான தீர்ப்பு கிடைத்த பின்னரே காரணங்கள் தொடர்பில் ஆராயலாம்.

எவ்வாறாயினும், நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை நாம் ஏற்கின்றோம். ஜனநாயகத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.