யாழ். நோக்கி பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் விபத்தில் சிக்கி பலி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு, பிறிதொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.

கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதி யாழை சேர்ந்த நிசான் ஜனுஸ்டன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.