இராணுவ அதிகாரியின் மனைவி மற்றும் பிள்ளைக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்

ஹோமாகமையை சேர்ந்த இராணுவ கேர்ணலின் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அவர்கள் பனாகொடை இராணுவ முகாமில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு இராணுவ கேர்ணல்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இந்த இராணுவ அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டதுடன் அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஹொரணையை சேர்ந்த இராணுவ அதிகாரியின் குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் ஹோமாகமை பிட்டிபனவை சேர்ந்த இராணுவ அதிகாரியின் மனைவி மற்றும் ஒரு பிள்ளைக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிள்ளை வீட்டில் இருந்து விளையாடுவதற்காக அருகில் உள்ள இரண்டு வீடுகளுக்கு சென்றுள்ளதால், அந்த வீடுகளில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி வைக்க பொது சுகாதார அதிகாரிகள் நேற்று நடவடிக்கை எடுத்தனர்.

கடற்படையின் கட்டளை அதிகாரி ஒருவரின் வீடும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் அடங்குகிறது.

அந்த அதிகாரியின் மகள் பூப்பெய்தியுள்ளதுடன், வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் அந்த நிகழ்ச்சியிலும் அவருக்கு கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.