பதினாறு வயதுடைய சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞன் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - பாலையூற்று பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞனை இம்மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாலையூற்று திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபர் பதினாறு வயதுடைய சிறுமியை மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளதோடு ,சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் சந்தேக நபரின் வீட்டில் சிறுமியை வைத்திருந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர்கள் சந்தேக நபர் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து திருகோணமலை நீதிமன்றநீ திவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.