நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் நேற்று இரவு 11 மணி வரையில் 52 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1735 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர் 52 பேரில் 31 பேர் கடற்படையினராகும். 19 பேர் கட்டாரில் இருந்து வந்தவர்களாகும். ஏனைய இருவர் குவைத்தில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கையில் தற்போது 888 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 836 பேர் முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.