புறக்கோட்டையில் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு - புறக்கோட்டையில் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் இன்றைய தினம் நீதிவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பொலிஸாரால் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் பிலியந்தலையை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இருவர் மீதும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.