கொரோனா அபாயத்துடன் பணியாற்றும் வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்கள்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா நகரசபைத் சுகாதார தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்புமின்றி கொரோனா அச்சத்திற்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் பாதுகாப்பு கருதி முகக்கவசம் போன்றவற்றை அணியுமாறும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்களின் நிலை இவ்வாறில்லை.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றும் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முகக்கவசம் அணியாமலும், கையுறைகள் அணியாமலும் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக மக்கள் தாம் பாவித்த முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் குப்பைக் கூடைக்குள் போட அதனை கையுறைகள் இன்றி தமது கைகளால் அகற்றுவதை காண முடிகிறது.

இதனால், இவர்களினதும், இவர்களது குடும்பங்களினதும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, இவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டு ஆகும்.