சந்தையில் விநியோகிக்கப்பட்டிருந்த தரமற்ற பெருந்தொகை இரும்புக்கம்பிகள் மீட்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

கட்டடநிர்மாணங்களுக்காக பயன்படுத்தப்படுத்துவற்காக சந்தையில் விநியோகிக்கப்பட்டிருந்த தரமற்ற இரும்புக்கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாவனையாளர் உரிமைக்காப்பு தேசிய இயக்கம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த இரும்புக்கம்பிகள் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறையிடப்பட்டுள்ளதாக இயக்கத்தின் தலைவர் ரஞ்சித விதானகே தெரிவித்துள்ளார்

சந்தையில் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டிருந்த இரும்புக்கம்பிகளின் மாதிரிகளும் நுகர்வோர் அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து நாடளாவிய ரீதியில் சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் மாதத்தில் மாத்திரம் 22 தொன் வரையிலான இரும்புக்கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித தெரிவித்தார்.

எனினும் இந்த தகவல்களை நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் சாந்த திசாநாயக்க உறுதிப்படுத்தவில்லை. அவ்வாறு இரும்புகள் கைப்பற்றப்பட்டாலும் அவை முதலில் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.