தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாய் விளங்கியவர் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை :வண.பிதா எஸ்.சந்திரகுமார்

Report Print Ashik in சமூகம்

கிறிஸ்தவ மக்களுக்கு மாத்திரம் அல்ல தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அடையாளமாகவும், ஒரு வீரத்தலைவனாகவும் செயல்பட்டவர் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை என பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் எஸ்.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மன்னர் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அடையாளத்தை காண்பித்துள்ளார்.

கிறிஸ்தவ மக்களுக்கு மாத்திரம் அல்ல தமிழ் பேசுகின்ற மக்களுக்கு ஓர்அடையாளமாகவும், ஒரு வீரத்தலைவனாகவும் நான் அவரை பார்க்கின்றேன்.

இலங்கையில் இடம் பெற்ற அனைத்து பிரச்சினைகளையும் ஒரு வீரத்தலைவனாக இருந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.அவரின் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிக்கின்றேன்.

வட மாகாணம் பல விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.எத்தனை பிரச்சினை வந்தாலும் யாராக இருந்தாலும் ஆயர் இல்லத்திற்கு வந்து விடை பெற்றுச் செல்லுகின்றனர்.

ஆயர் இல்லம் நீதி வழங்கக்கூடிய சரியான ஓர் இடமாக நான் கருதுகின்றேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதன் போது ஐ.டி.எம். நேசன் கெம்பஸ் தலைவர் வி.ஜனகன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது இருவரும் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை சந்தித்து ஆசிபெற்றதுடன் மன்னார் மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோவை சந்தித்து ஆசி பெற்று மன்னார் மறைமாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.