மல்லாவியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கணவரைக் காணவில்லை: மனைவி முறைப்பாடு

Report Print Thileepan Thileepan in சமூகம்

மல்லாவி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய பாலசுந்தரராஜா பிரபாகரன் என்பவரை காணவில்லை என அவரின் மனைவி மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் பாலிநகர் வவுனிக்குளம் பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரபா என அழைக்கப்படும் பாலசுந்தரராஜா பிரபாகரன் என்ற வர்த்தகர் கடந்த புதன்கிழமை (06.03.2020) மல்லாவியிலிருந்து வவுனியாவிற்கு செல்வதாக தெரிவித்து சென்ற நிலையில் இது வரையில் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரின் மனைவியினால் அவரை காணவில்லை என தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் இறுதியாக இவர் வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற புள்ளி இடப்பட்ட மேலாடையும் கறுப்பு நிற ஜீன்ஸ்சும் அணிந்திருந்தார் என அவரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை யாரேனும் கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அவரின் மனைவி வேண்டுகொள் விடுத்துள்ளார்.