காட்டுக்குள் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி பலி

Report Print Steephen Steephen in சமூகம்

மொனராகலை, தெனகல்லந்த பிரதேசத்தில் கடந்த 31ஆம் திகதி ஒருவரை சுட்டுக்கொலை செய்து விட்டு, காட்டில் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்ய முயற்சித்த போது பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தெனகல்லந்த, மாராவ இத்தேகடுவ என்ற முகவரியை சேர்ந்த கோனார முதியன்சலாகே சமிந்த குமார என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பி வந்து தலைமறைவாக இருந்த நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் யால தேசிய வனத்தின் எல்லையான கஹம்பான காட்டில் தலைமறைவாக இருந்துள்ளதுடன் அவரை கைது செய்ய பொலிஸார் காட்டுக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலேயே சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபர் கடந்த மாதம் 31ஆம் திகதி இரவு 8.30 அளவில் தெனகல்லந்த பிரதேசத்தில் திஸாநாயக்க முதியன்சலாகே சோபித திஸாநாயக்க என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.