முதன்முறையாக உராய்வு நீக்கி எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடவுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் முதல் தடவையாக உராய்வு நீக்கி எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் உராய்வு நீக்கி எண்ணெய் நுகர்வு வருடாந்தம் 65ஆயிரம் லீற்றருக்கும் அதிகமானதாகும்.

எனினும் உராய்வு நீக்கி எண்ணெய் இதுவரையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உராய்வு நீக்கி எண்ணெய்யை இலங்கைக்குள் உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் அது பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு போனதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில் புதிய இயந்திரத்தின் மூலம் வருடம் ஒன்றுக்கு 33 ஆயிரம் லீற்றர் உராய்வு நீக்கி எண்ணெய்யை உற்பத்தி செய்யமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் கடந்த வருடம் மாத்திரம் 65ஆயிரம் லீற்றர் உராய்வு நீக்கி எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு மாத்திரம் 30 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.