பாதாள உலகக்குழுக்கள் தலைதூக்கவில்லை: தேசபந்து தென்னகோன்

Report Print Steephen Steephen in சமூகம்

எந்த வகையிலும் பாதாள உலகக்குழுக்கள் மீண்டும் தலைதூக்கவில்லை என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதாள உலகக்குழுக்களின் விளையாட்டுக்கள் முடிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதாள உலகக்குழுக்கள் மீண்டும் தலைத்தூக்கி உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே தேசபந்து தென்னகோன் இதனை குறிப்பிடடுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலான நிலைமைகள் காரணமாக கடந்த தினங்களில் சில பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.