கிளிநொச்சியில் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மீட்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - ஆனந்தபுரம் பகுதியில் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்ட சுமார் 4.5 அடி உயரம் கொண்ட 9 கஞ்சா செடிகள் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரை அண்மித்த ஆனந்தபுரம் பகுதியில் மேற்படி கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதீபனுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மிகவும் சூட்சுமமான முறையில் வீட்டுவளவில் வளர்ப்பட்ட சுமார் 4.5 அடி உயரம் கொண்ட 9 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்