ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தெமட்டகொடையில் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமான புகைப்படங்கள் வெளியீடு

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட கொழும்பு,தெமட்டகொடை, மஹவில கார்டன் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் இப்ராஹிம் வீட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வீட்டுக்குள் இருந்த கர்ப்பிணி பெண் பளிங்கு கல் பதிக்கப்பட்டு தரையில் படுத்துக்கொண்டு, பிள்ளைகளை அருகில் அழைத்து குண்டை வெடிக்க செய்திருக்கலாம் என சம்பவம் நடந்த இடத்தில் பரிசோதனைகளை நடத்திய தடயவியல் பரிசோதனை அதிகாரி அஜித் பிரியந்த பேதுரு ஆராச்சி ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரி ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தொடர் தாக்குதல் நடந்த இடங்களில் தடயவியல் பரிசோதனைகளை நடத்திய விதம் தொடர்பாக ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

வர்த்தகர் இப்ராஹிமின் புதல்வர்களில் ஒருவர் கொழும்பு ஷெங்கரீலா ஹொட்டலில் , சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதலை நடத்தியிருந்தார்.