சீன தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டம்

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பில் உள்ள சீன தூதரகத்துக்கு முன்னால் அடுத்த வாரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ம் திகதி நடத்தப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட நட்டங்களுக்கு சீனா நட்டஈட்டை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமது ஆர்ப்பாட்டம் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நடைபெறுவதால் உரிய சுகாதார ஒழுங்குவிதிகள் கடைப்பிடிக்கப்படவிருப்பதாக ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இதனை கண்காணிப்பதற்காக சுகாதார அதிகாரிகள், காவல்துறையினர் உட்பட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.