தர்கா நகரில் முஸ்லிம் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம்! சிறப்பு விசாரணைக்கு உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்

அளுத்கம - தர்கா நகர் பகுதியில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அளுத்கம, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக் அஹமட் கடந்த மாதம் 25ம் திகதி ஊரடங்கு காலப்பகுதியில் வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்த வேளை பொலிஸாரினால் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டார்.

இது குறித்த காணொளி வெளியாகிய நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கை கிரிக்கெட் அண்யின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.

குறித்த சிறுவனை தாக்கவில்லை எனவும், அவரை கட்டுப்படுத்தவே பொலிஸார் முயன்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளின் நடத்தை குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தனித்தனி இருவேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.