பொது இடங்களில் முகமூடிகள் அணியுமாறு வலியுறுத்தும் WHO

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸிக்கு எதிராக முகக்கவசம் அணிவது தொடர்பான தமது அறிவுரையை உலக சுகாதார மையம் மாற்றியமைத்துள்ளது.

இதன்படி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுவில் முகக்சவசம் அணியது அவசியம் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே உலகின் பல நாடுகள் பொதுவில் முகக்கவசங்ளை அணிவதற்கான பரிந்துரைகளை செய்திருந்தன.

எனினும் இதனை உலக சுகாதார மையும் முன்னதாக ஏற்றுக்கொளள்வில்லை.

ஆரோக்கியமாக மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்கான உரிய ஆதாரங்கள் இல்லை என்று உலக சுகாதார மையம் கூறிவந்தது.

எனினும தற்போது மருத்துவ ரீதியற்ற சாதாரண முகக்கவசங்களை பொதுமக்கள் அணிவது குறித்து உலக சுகாதார மையம் பரிந்துரை செய்துள்ளது.